Saturday, October 29, 2011

இறவை அழைக்கிறேன்
உறக்கத்திற்கு
கனவைத் தருகிறது உன் நினைவாக!

யாரடி சொல்லித்தந்தார்கள் உனக்கு ?

நடை பாதையில் கண்ட போதெல்லாம்
நான் நானப்படுவேன்
உன் முகம் பார்த்துப்பேச
உன் புன்னகையை எனக்களித்து
என் நாணம் பரித்தவளா நீ ?
இப்போது
எனைப்பார்க்கையில்
யாரென்று கேட்கிறாய் ?

முன்னம் ஒருமுறை
என் முகம் பார்க்க அழைத்தாய்
பின்பு ஒருமுறை
அன்னம் கூட எனக்களித்தாய்
இப்படியெல்லாம்
என் எண்ணம் பறித்துவிட்டு
எப்படியடி சொல்லிப்போனாய்
நீ யாரென்று தெரியவில்லையென்று?.

சரிப்போ........

நடந்துப்போனோம்
ஞாபகம் இருக்கிறதா ?
நனைந்தபடி
நம் கல்லூரிப்பாதையில்?

விடுமுறை நாளொன்றில்
விருந்தளித்தையே
உன் கை பேசி வழியே
அதுவும் மறந்து போனதோ உனக்கு ?

ம்ம்ம்ம் .................

புரிந்துப்போனதடி
நீ பூமிக்கு மேலே வானமாய் இருக்கிறாய்,
நான் இன்னும்
பூமியின் மீது புழுதியை இருக்கிறேனென்று..........................!

No comments:

Post a Comment