Tuesday, November 8, 2011

எதற்காக
காதல் கவிதைகளையே எழுதுகிறாய் என்று கேட்கிறார்கள்
எப்படி சொல்வேன்
காணமல் போன இதயத்தை
கண்டு பிடிக்கத்தான் இந்த கவிதை விளம்பரமென்று...!

Saturday, October 29, 2011

இலையுதிர் கால சருகுகளாய்
எனக்குள் நீ
விழுந்துகொண்டே இருக்கிறாய்
மீண்டும் மீண்டும் முளைப்பதற்காக...!!
காத்திரு.....!
வேகமாய் புறப்பட்டுவிட்டேன்

உன்னை அடைவதற்கு,-ஆம்

மறக்கச்சொன்னாய்

எதை என்பதை கேட்பதற்காக,

என்னை என்றால்
எப்போதோ மறந்துவிட்டேன்;

உன்னை என்றால்
என் மரணம் வரை காத்திரு...!
பெண்ணே....!
இன்னும் அதிகமாக
என்னை காயப்படுத்து,
என் கண்ணீர்த்துளிகளை
சந்தோசப்படுத்த....!
எளிதில்
தீப்பற்றக்குடிய பொருட்களை
பேருந்தில்
ஏற்ற வேண்டாமென்று சொல்லிவிட்டு
ஏனோ?
இத்தனை பெண்களை ஏற்றிச்செல்கிறது
இந்த பேருந்து...!
பெண்களின் சிரிப்பைவிட
இந்த சிகரட் நெருப்பின் எருச்சல்
எவ்வளவோ மேலானது....!
என்னருகில் நீ இருக்க,
எனக்கெதற்கு
இன்னொரு வானம்
இன்னொரு பூமி..!

சொர்க்கம் தூரமென்று
சொன்னவர்கள் யாரோ?

நீ பக்கம் வந்து நின்றால்
சொர்க்கம் எனக்கு கண்ணெதிரே - அடி பெண்ணே,
நீ வெட்கம் காட்டிச்சென்றல்
நிக்குமடி என்மூச்சு உன்னெதிரே..!